Submit your work, meet writers and drop the ads. Become a member
Aug 2015
விதியின் நோக்கம் என்னவோ விடியல் எனக்கு இல்லை
மதி மழுங்கி நிற்கும் மனசுக்கு மறதியே கொஞ்சம் கருணை காட்டு!!

மஞ்சள் வானம் வருகையில் நெஞ்சம் கொஞ்சம் கெஞ்சுது
நேரம் ஆக ஆக வாழ்வும் இருளில் மூழ்குது

முகவரி தொலைத்த வாழ்கையை மீட்டிட வழியில்லை
மிச்சம் மீதி காதல் துளி கூட அவளிடம் மீதமில்லை

நிலையான எதுவும் இங்கு நிஜமில்லை என்ற போதும்
நினைவுக்கு உயிர் கொடுக்கும் மனசுக்கு தெரியவில்லை
காதலை விட மோசமான நரகம் இவ்வுலகில் இல்லையென!!
Meena Thangadurai
Written by
Meena Thangadurai  India
(India)   
296
 
Please log in to view and add comments on poems